நடப்பு காரீப் பருவத்தில் இதுவரை 456.79 லட்சம் டன் நெல் கொள்முதல் - மத்திய உணவுத்துறை அமைச்சகம் தகவல்
நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் இதுவரை 86 ஆயிரத்து 242 கோடி ரூபாய் மதிப்பிலான 456.79 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் நடப்பு காரீஃப் பருவத்தில் தமிழகம், ஆந்திரம், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற நெல் கொள்முதல் பணிகள் மூலமாக சுமார் 56லட்சத்து 55 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments