ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி

0 12536

மெல்பேர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.

போட்டியின் 4ம் நாளான இன்று 2வது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, 200 ரன்களில் சுருண்டது. சிராஜ் 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

பின்னர் 70 ரன்கள் என்ற எளிதான இலக்கை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 5 ரன்னிலும், புஜாரா 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் சுப்மான் கில் 35 ரன்களையும், ரஹானே 27 ரன்களையும் எடுக்க இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. அந்த தோல்விக்கு, இந்த வெற்றியின் மூலம் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments