மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்.. மீன்கள், மீன்பிடி உபகரணங்களை அபகரித்து சென்றதாக புகார்..
தொழிற்சாலை, சாலை, மருத்துவ வசதிகளில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் - முதலமைச்சர் பெருமிதம்
தொழிற்சாலை, மருத்துவம் மற்றும் சாலை வசதிகளில் இந்தியாவிலேயே முன்னோடியாக இருக்கின்ற மாநிலம் தமிழகம் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 2021ஆம் ஆண்டில் மீண்டும் மக்களின் மகத்தான ஆதரவுடன் புரட்சித்தலைவர் ஆட்சி அமைய வேண்டும் என்றும் அதற்கு இரட்டை இலையில் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இன்றைக்கு ஆயிரத்து 652 கோடி ரூபாயில் அத்திக்கடவு - அவினாசி திட்டம் நடைபெற்று கொண்டு இருப்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Comments