கர்நாடகாவில் பசுவதைக்கு எதிரான அவசரச் சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
கர்நாடகாவில் பசுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 9ம் தேதி சட்டசபையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே தாக்கல் செய்யப்பட்டது. பேரவையில் நிறைவேற்றப்பட்டாலும், மேலவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் உள்ளது.
ஆனாலும் தற்போது உள்ள நிலைமையிலேயே இந்த மசோதா, அவசரச் சட்டமாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதலுக்குப் பின் சட்டமாக்கப்படும் என்றும் மாநில கால்நடை வளர்ப்புத்துறை அமைச்சர் பிரபு சவான் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கர்நாடகாவில் எருமை இறைச்சிக்கு விற்பனைக்கும், உண்பதற்கும் எந்தத் தடையுமில்லை என்று மற்றொரு அமைச்சர் மதுஸ்வாமி குறிப்பிட்டார்.
Comments