கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை

0 1305

கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, இங்கிலாந்தில் இருந்து புதிய வகை கொரோனா தொற்று பரவுவதால் மாநிலம் முழுவதும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

31ந் தேதி மாலை 6 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி வரை பெங்களூருவில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல் ஆணையர் கமல் பந்த் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments