தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா உயிரிழப்பு... 13 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று

0 5737

மிழ்நாட்டில், புதிதாக 1,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்ற 1,074 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பெருந்தொற்று பாதிப்பால் 11 பேர் உயிரிழந்தனர். 6 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா உயிரிழப்பு பதிவாகி உள்ளது. பெரம்பலூர், மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது .

சென்னையில் 285 பேர், புதிதாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 867 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments