திரும்பி வந்த மகள்கள், அக்கவுண்டில் 15 லட்சம்!- அபயா வழக்கு அடக்கா ராஜூவுக்கு இன்பஅதிர்ச்சி

0 23187

கேரளாவில் 28 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட அபயா வழக்கில் பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில், கோட்டயத்தில் அபயா கொலை நடந்த மடத்தில் 1992 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதியன்று அலுமினியங்களை திருட வந்த அடக்கா ராஜூ என்ற திருடனின் சாட்சி முக்கிய இடம் பெற்றது. கொலை நடந்த தினத்திலன்  இரவில் இரவு நேரத்தில்  பாதிரியார்களை தான் பார்த்ததாக நீதிமன்றத்தில் அடக்கா ராஜூ உறுதிபட கூறினார். இதையடுத்தே, பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபிக்கு தண்டனை வழங்கப்பட்டது. முன்னதாக, அடக்கா ராஜூ சாட்சியை மாற்றி சொன்னால் கோடிக்கணக்கில் பணம் தருவதாகவும் பேரம் பேசப்பட்டது. ஆனால், அடக்கா ராஜூ தான் கண்ட காட்சியை திருவனந்தபுரம் சி.பி.ஐ நீதிமன்றத்தில் பிறழ் மாறாமல் உறுதியுடன் சொன்னார்.

சாட்சி சொன்ன முன்னாள் திருடனானா அடக்கா ராஜூவுக்கு பல இடங்களில் இருந்து பாராட்டு குவிந்தது. அவரின் பெயர் நல்லவிதமாக மீடியாக்களில் அடிபட்டது. இதையடுத்து, அடக்கா ராஜூவின் திருட்டு புத்திக்காக அவரை விட்டு பிரிந்து சென்ற இரு மகள்களும் மீண்டும் தந்தையை தேடி வந்து குடும்பத்துடன் இணைந்தனர். இதற்கிடையே , அடக்கா ராஜூவின் கஷ்ட ஜீவனம் குறித்தும் செய்திகள் வெளியானது. அவரின் வங்கிக் கணக்கையும் சிலர் சோசியல் மீடியாக்களில் பகிர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், அடக்கா ராஜூவின் வங்கிக்கணக்கில் இதுவரை 15 லட்சம் சேர்ந்துள்ளது. ஆனால், இந்த விஷயம் அடக்கா ராஜூவுக்கு தெரியாது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வங்கிக்கு சிறிது பணம் எடுக்க அடக்கா ராஜூ சென்ற போதுதான், வங்கியில் அவரின் கணக்கில் ரூ. 15 லட்சம் வரை இருப்பது தெரிய வந்தது. கேரளாவின் பல முனைகளில் இருந்தும் அடக்கா ராஜூவின் உறுதியை பாராட்டி அவரின் வங்கிக்கணக்கில் பலரும் பணம் போட்டிருப்பது தெரிய வந்தது . மகள்கள் வந்த மகிழ்ச்சியில் உள்ள அடக்கா ராஜூ, பணம் பெரியதே இல்லை. என் மகளை போன்ற அந்த பெண்ணுக்கு நீதி கிடைத்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதே எனக்கு உண்மையான மகிழ்ச்சி'' என்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments