நிழல் உலக தாதாக்கள் சோட்டா ராஜன், முன்னா பஜ்ரங்கியின் தபால் தலை வெளியிட்டதால் சர்ச்சை : யார் இதற்கு காரணம் என தபால் நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை
நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மற்றும் கேங்ஸ்டர் முன்னா பஜ்ரங்கி ஆகியோரின் புகைப்படத்துடன் தபால் தலை வெளியிடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
தபால் நிலையத்தில் மை ஸ்டேம்ப் என்ற திட்டத்தின் கீழ் எந்த ஒரு தனி நபரும் அவரது புகைப்படத்தைக் கொடுத்து அதே போன்று தபால் தலையைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்காக 300 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
அதன்படி மர்மநபர் ஒருவர் 600 ரூபாயை கொடுத்து சோட்டா ராஜன் மற்றும் முன்னா பஜ்ரங்கி ஆகியோரின் தலா 12 தபால் தலையை உத்தரப்பிரதே மாநிலம் கான்பூரில் உள்ள தபால் நிலையத்தில் பெற்றுள்ளார். தபால் துறையின் அலட்சியத்தை எடுத்துக் காட்டுவது போல் அமைந்துள்ள இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Comments