டிச.30-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

0 1152
வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், வரும் 30 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், வரும் 30 ஆம் தேதி  பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

29 ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக விவசாயிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

ஆனால், 30 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விக்யான் பவனில் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக 40 விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments