லண்டனில் இருந்து வந்தோரிடம் எடுத்த இரத்த மாதிரி ஆய்வு முடிவு வந்தால்தான் உருமாறிய கொரோனா தொற்றா எனத் தெரியும் - முதலமைச்சர்

0 1765

ண்டனில் இருந்து வந்தோருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது சோதனை முடிவு வந்தபின் தான் தெரிய வரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ள 13 பேருக்கும் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுப் புனேவில் உள்ள ஆய்வுக் கூடத்துக்குச் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கொரோனா தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை ஏழாயிரத்து 544 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments