திருவனந்தபுரம் மேயராக 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் முறைப்படி தேர்வு

0 2334
திருவனந்தபுரம் மேயராக 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் முறைப்படி தேர்வு

கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மேயராக 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கேரளத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரத்தை உள்ளடக்கி, ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில், ஒரு வார்டில் போட்டியிட்ட, 21 வயது கல்லூரி மாணவியான ஆர்யா ராஜேந்திரனை, மேயர் பதவிக்கு அக்கட்சித் தலைமை நிறுத்தியது.

திருவனந்தபுரம் மாமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று, ஆர்யா ராஜேந்திரன் முறைப்படி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய வரலாற்றிலேயே மிக இளம் வயது மேயர் என்ற பெயரைப் ஆர்யா ராஜேந்திரன் பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments