ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி எப்போது? வல்லுநர் குழு ஆய்வு!
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேக்கா தயாரிப்பு கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வல்லுநர் குழு இந்த வாரத்தில் கூடி ஆய்வு செய்ய உள்ளது.
அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை சீரம் இன்ஸ்டியூட் ஏற்கெனவே சமர்ப்பித்திருந்தது. இதன் மீது முடிவெடுப்பதற்கு தேவையான கூடுதல் விவரங்களையும் தேசிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு கடந்த வாரத்தில் சீரம் இன்ஸ்டியூட் வழங்கியது.
இதையடுத்து, வல்லுநர்கள் குழு இந்த வாரத்தில் கூடி, அந்த விவரங்களை ஆய்வு செய்கிறது. பைசர் தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதித்த பிறகே, அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
உள்ளூர் தயாரிப்பான கோவேக்சின் தொடர்பாக மேலும் சில விவரங்களை ஏற்கெனவே வல்லுநர் குழு கேட்டிருந்த நிலையில், அதுதொடர்பாக பாரத் பயோடெக் இன்னும் பதிலளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments