நியூயார்க் நகரிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரம்

0 1130

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

டிசம்பர் 31ம் தேதி முடிந்து ஜனவரி 1ம் தேதி தொடங்கும் நள்ளிரவு 12 மணியளவில் டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்ட கொண்டாட்டம் நடைபெறும். இதையொட்டி அங்கு பிரமாண்ட கிறிஸ்டல் பந்து வைக்கப்பட்டு ஓளியூட்டப்படும்.

அதேபோல் இந்தாண்டும் புதிய வடிவ பந்தை வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வழக்கமாக ஆயிரகணக்கானோர் வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தாண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 100க்கும் குறைவானோர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments