"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஜனவரி முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூட வாய்ப்பில்லை என தகவல்
ஜனவரி முதல் வாரத்தில் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தொடர் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவையின் ஒரு கூட்டத்தொடர் முடிந்து, 6 மாதத்திற்குள் அடுத்த கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்பது விதியாகும். கடந்த செப்டம்பர் மாதம் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், அடுத்த கூட்டத்தொடருக்கு மார்ச் வரை அவகாசம் உள்ளது.
இருப்பினும், புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 4 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்கும் என தகவல் வெளியானது. ஆனால் ஆளுநர் தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வராத காரணத்தால் சட்டப்பேரவை கூடும் நாள் தள்ளி போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொங்கலுக்கு பின்னரே சட்டப்பேரவை கூடும் என சட்டப்பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments