பாஜகவினரை எதிர்த்துப் பேச தைரியம் இல்லாத ஆட்சி, அதிமுக ஆட்சி - எம்.பி. கனிமொழி
பாஜகவில் இருப்பவர்களை எதிர்த்துப் பேச தைரியம் இல்லாத ஒரு கட்சியாக, ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள முக்குராந்தல் பகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குறல் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், அதிமுகவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர மக்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக கூறினார்.
இதேபோல் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய கனிமொழி, இந்த தேர்தலில் திமுக வென்றுவிட கூடாது என்பதற்காக பலர் திமுகவிற்கு எதிராக சேர்ந்து நின்று வியூகத்தை வகுத்து வருவதாக கூறினார்.
Comments