நாஷ்வில் குண்டு வெடிப்பு தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என ஐயம்; குண்டு வெடித்த இடத்தில் மனித உடலின் எச்சங்கள், இருப்பதாகத் தகவல்

0 1863
நாஷ்வில் குண்டு வெடிப்பு தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என ஐயம்; குண்டு வெடித்த இடத்தில் மனித உடலின் எச்சங்கள், இருப்பதாகத் தகவல்

மெரிக்காவில் நடந்த குண்டு வெடிப்பு தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

டென்னிஸி மாகாணத்தில் உள்ள நாஷ்வில் என்ற இடத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் குடியிருப்பு பகுதியில் கார் குண்டு வெடித்ததில் 3 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து விசாரித்து வரும் ஃஎப்பிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் மனித உடலின் சில எச்சங்கள் கிடைத்துள்ளதாகவும் எனவே தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் சில நாட்களாகச் சுற்றித் திரிந்த அன்டோனி குய்ன் வார்னர் என்பவர் இந்த குண்டு வெடிப்பை நடத்தியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments