நாட்டிலேயே இளம் வயதில் கவுன்சிலராகி சாதனை.... 21 வயதில் பஞ்சாயத்து தலைவராகிறார் ரேஷ்மா!

0 3110
ரேஷ்மா

கேரள மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த முறை கேரள உள்ளாட்சி தேர்தலில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்களும் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். சமீபத்தில் , திருவனந்தபுரம் மேயராக 21 வயது ஆர்யா ராஜேந்திரன் என்ற இளம் அறிவிக்கப்பட்டு , நாட்டு மக்களின் கவனத்தை பெற்றார். அந்த வகையில் , நாட்டிலேயே இளம் பஞ்சாயத்து தலைவராக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ரேஷ்மா மரியம் ராய் தேர்வு செய்யப்படவுள்ளார்.

பத்தனம் திட்டா மாவட்டத்தில் அருவப்பள்ளம் என்ற கிராம பஞ்சாயத்து உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 21 வயது எட்டியிருக்க வேண்டும். கேரள உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நவம்பர் 19 ஆம் தேதி கடைசி நாள். அதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது நவம்பர் 18 ஆம் தேதிதான் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக ரேஷ்மாவுக்கு 21 வயது பிறந்தது. தன் பிறந்த நாளுக்கு அடுத்த நாளே ரேஷ்மா அருவப்பள்ளம் பஞ்சாயத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கலும் செய்தார். கேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மிக இள வயது வேட்பாளர் மரியம்தான் என்ற பெயரையும் பெற்றார். அருவப்பள்ளம் பஞ்சாயத்தில் 11 வது வார்டில் ரேஷ்மா போட்டியிட அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் சுஜாதா மோகன் என்பவர் நிறுத்தப்பட்டார். இதில், சுஜாதா மோகனை விட 70 வாக்குகள் அதிகம் பெற்று ரேஷ்மா பெற்றி பெற்றார். நாட்டிலேயே இள வயதில் கவுன்சிலரானவர் என்ற பெருமையும் ரேஷ்மாவுக்கு கிடைத்தது.

அவருவப்பள்ளம் பஞ்சாயத்தில் தேர்வு செய்யப்பட்ட 15 பஞ்சாயத்து உறுப்பினர்களில் 9 பேர் சி.பி.எம். கட்சியை சேர்ந்தவர்கள். இதனால், பஞ்சாயத்து தலைவராக சி.பி.எம். கட்சியை சேர்ந்தவர் தேர்வு செய்வது உறுதியாகியுள்ளது. இந்தமுறை அருவப்பள்ளம் பஞ்சாயத்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, சி.பி.எம் கட்சி சார்பாக அருவப்பள்ளம் பஞ்சாயத்தில் 5 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் இளையவர் ரேஷ்மாதான். இதனால், திருவனந்தபுரம் மேயராக ஆர்யாவை அறிவித்தது போல, அருவப்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரேஷ்மாவை மார்க்சிஸ்ட் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும் , கொன்னி பகுதி மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் ஷியாம்லால் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ரேஷ்மாவின் லீடர்ஷிப் திறனுக்காக அவரை பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்துள்ளதாகவும் விரைவில், இது குறித்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்படும் என்று ஷியாம்லால் தெரிவித்துள்ளார்.

கொன்னியில் உள்ள வி.என்.எஸ் கல்லூரியில் பி.பி.ஏ படித்துள்ள ரேஷ்மாவின் குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியின் பின்னணி கொண்டவர்கள். ரேஷ்மாவின் தந்தை ராய் பி. மேத்யூ மர வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தாயார் மினிராய் கல்லூரி பேராசிரியை ஆவார். ஆனால், கம்யூனிசத்தின் கொண்ட பிடிப்பால் ரேஷ்மா, பள்ளி பருவத்திலிருந்து மார்க்சிஸ்ட் கட்சியில் ஈடுபாடு காட்டி வந்தார் ரேஷ்மா.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments