கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம்

0 1809

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அமைப்புச் செயலாளர் பொன்னையன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குழுவில் இடம்பெற்றுள்ள 11 பேர் கலந்து கொண்டனர்.

வருகிற சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தேர்தல் அறிக்கையை தயாரிப்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு வரைவு அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments