தமிழகத்தில் இன்று வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
29 மற்றும் 30ம் தேதிகளில் தென் தமிழகம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், தெற்கு உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வடக்கு உள் மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments