2ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்தியா 326 ரன்கள்
மெல்பேர்னில் நடைபெறும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 326 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை விட 131 ரன்கள் முன்னிலை பெற்றது.
போட்டியின் 3ம் நாளான இன்று 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடியது. சீரான ஆட்டத்தை வெளிபடுத்திய ரஹானே 112 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா அரைசதம் அடித்த நிலையில், 57 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
உமேஷ் யாதவ் 9 ரன்னிலும், அஸ்வின் 14 ரன்னிலும், பும்ரா ரன் எதுவும் எடுக்காத நிலையிலும் ஆட்டமிழந்து நடையை கட்டினர். முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் இந்தியா 326 ரன்களை சேர்த்தது. இதன்மூலம், முதல் இன்னிங்சில் 131 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயான் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது 2ஆவது இன்னிங்சை விளையாட ஆரம்பித்தது. 4 ரன்னில் ஜோ பர்னசை உமேஷ் யாதவும், 28 ரன்னில் மார்னசை அஸ்வினும் ஆட்டமிழக்க செய்தனர்.
Comments