வட மாநிலங்களில் தட்பவெட்ப நிலை 5 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 1486

வட மாநிலங்களில் பல இடங்களில் தட்பவெட்ப நிலை 5 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வார இறுதியில் கடும் குளிர் அலை வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் வெப்ப நிலை 5 டிகிரி செல்சியசைவிட குறைவாக இருந்ததால் மக்கள் குளிரில் தவித்துக் கொண்டிருந்தனர்.

அடர்த்தியான பனிமூட்டமும் காணப்பட்டதால் இரவிலும் அதிகாலையிலும் வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் கத்ரா மலைப்பகுதியில் அமைந்துள்ள மாதா வைஷ்ணவதேவியின் ஆலயம் உள்ள பகுதியில் அதிகளவில் பனிமழை பொழிந்தது. இதனால் பக்தர்கள் குளிரில் நடுங்கினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments