சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது : நெல்லை சமூக நீதி மாநாட்டில், காணொலி மூலம் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நெல்லை சமூக நீதி மாநாட்டில், காணொலி மூலம் பங்கேற்று உரை ஆற்றிய அவர், சமூக நீதியே, திராவிட இயக்கத்தின் அடித்தளம் என்றார்.
எனவே, எந்தச் சூழ்நிலை வந்தாலும் சமூகநீதியை, இடஒதுக்கீட்டை, வகுப்பு உரிமையை விட்டுத் தர மாட்டோம் என்பதுதான் நமது கொள்கை என மு.க. ஸ்டாலின் உறுதிபட கூறினார்.
இதேபோல, மக்கள் விடுதலைக் கட்சியின் சார்பில் மதுரையில் நடைபெற்ற 'தமிழகம் காப்போம்' மாநில மாநாட்டிலும் மு.க.ஸ்டாலின், காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.
Comments