புதிய கொரோனாவை கண்டு பயப்பட தேவை இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
உருமாறிய கொரனோ வைரசை கண்டு பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வார்டுகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
அரசு சொல்லும் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றினால் மீண்டும் மறு ஊரடங்கு தேவையில்லை என கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் விஜபாஸ்கர் பதிலளித்தார்.
இதனிடையே, இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்துள்ள 2 ஆயிரத்து 300 பேரில், இதுவரை 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தமது மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Comments