அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூடி, முக்கிய ஆலோசனை
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களை கவர, புதிய வியூகம் வகுப்பது குறித்து, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு சென்னையில் கூடி, முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளது.
இராயப்பேட்டை - அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொன்னையன், கே.ஏ. செங்கோட்டையன், செம்மலை, கோகுல இந்திரா, ஜே.சி.டி பிரபாகர் மற்றும் அன்வர் ராஜா உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு வரைவு அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
Comments