கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட போதிலும் பாடங்களை அனிமேசன் வீடியோவாக பதிவிட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்திய பள்ளி ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு

0 2964
கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட போதிலும் பாடங்களை அனிமேசன் வீடியோவாக பதிவிட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்திய பள்ளி ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட போதிலும், பாடத்தை அனிமேசன் வீடியோக்களாக பென்டிரைவில் பதிவு செய்து, மாணவர்களுக்கு வழங்கி பாடம் நடத்தியதாக விழுப்புரம் பள்ளி ஆசிரியை ஹேமலதாவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

மன்கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகிலேயே மிகவும் தொன்மையான மொழியான தமிழ் மொழியை, ஆசிரியை ஹேமலதா கற்பித்து வருவதாகவும், கொரோனாவாலும் அவர் பணியில் தடைகளை ஏற்படுத்த முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

53 அத்தியாயத்தையும், அனிமேசன் வீடியோக்களாக பென்டிரைவில் பதிவிட்டு, மாணவர்களிடம் அவர் விநியோகித்ததாகவும், தொலைபேசிகளிலும் அடிக்கடி அவர்களுடன் உரையாடியதாகவும் மோடி கூறினார்.

இதனால் அந்த மாணவர்களுக்கு கல்வி மிகவும் ஆர்வமிக்கதாக மாறிவிட்டதாகவும் மோடி தெரிவித்தார்.

இதேபோல் பாட பதிவுகளை கல்வி அமைச்சகத்தின் இணையதளமான தீக்சாவில் பதிவேற்றம் செய்து பின்தங்கிய பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் கல்வி கற்க உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments