இந்திய தேசியக் கீதமான ஜன கண மன பாடல் முதன்முறையாக 1911ஆம் ஆண்டு பாடப்பட்ட தினம் இன்று!

0 10363

இந்திய தேசியக் கீதமான ஜன கண மன பாடல் முதன்முறையாக 1911ஆம் ஆண்டு இதே நாளில் பாடப்பட்டது.

கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் வங்க மொழியில் எழுதப்பட்ட ஜன கண மன பாடலை 52 நொடிகளில் பாடி முடிக்கும் வகையில் அவரே அதற்கு இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் முதன்முறையாக 1911ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டிலே பாடப்பட்டது.

அதன்பிறகு ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் பாடப்பட்டது. இந்தப் பாடலைத் தேசியக் கீதமாக்க வேண்டும் எனக் கூறியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

இந்திய அரசமைப்பு தேசியக் கீதமாக ஜன கண மன பாடலை 1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் நாள் ஏற்றுக்கொண்டது. தேசியக் கீதமாக்கப்பட்ட பின் அரசு விழாக்களின் நிறைவில் தேசியக் கீதம் ஒலிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments