சூப்பர்ஹெவி எனக் குறிப்பிடப்படும் மிகப்பெரிய ஏவூர்திக்கான சோதனை ஒருசில மாதங்களில் நடைபெறும் - எலோன் மஸ்க்
சூப்பர்ஹெவி எனக் குறிப்பிடப்படும் மிகப்பெரிய ஏவூர்திக்கான சோதனைகள் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
விண்கலங்கள், அவற்றை ஏவுவதற்கான ராக்கெட்கள் ஆகியவற்றை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் விண்வெளித்துறை வரலாற்றில் இதுவரை இல்லா வகையில் 28 எஞ்சின்கள் கொண்ட 240 அடி உயர ஏவூர்தியைத் தயாரித்துள்ளது.
இந்த ஏவூர்தியை அடுத்த சில மாதங்களில் சோதிக்க உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன்மூலம் நிலவு, செவ்வாய் ஆகியவற்றுக்கும் அவற்றுக்கு அப்பாலும் செல்லும் வகையில் விண்கலங்களை ஏவ முடியும்.
Comments