கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வுத் தேர்வு தொடங்கியது

0 14324

பள்ளி இறுதியாண்டு  முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை கல்வி உதவித் தொகை பெறுவதற்கு நடத்தப்படும் NTSE என்ற தேசிய திறனாய்வுத் தேர்வு தொடங்கியுள்ளது.

பள்ளி இறுதியாண்டு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்களின் தகுதியை கண்டறிவதற்கு,  மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஆண்டுதோறும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டுக்கான முதற்கட்ட  தேர்வு, சென்னை எழும்பூரில் உள்ள மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்பட மாநிலம் முழுவதும் 900 மையங்களில் தொடங்கியுள்ளது. தற்போது 10-ம் வகுப்பில் பயிலும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர்.

9 மணி முதல் 11 மணி வரை ஒரு தேர்வும், 11.30 மணி முதல் 1.30 மணி வரை மற்றொரு தேர்வும் என்று 2 கட்டங்களாக தேர்வு நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டும் அமர்ந்து தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments