இணைய வழி கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் முடக்கும்படி கூகுளுக்கு ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை

0 1899
இணைய வழி கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் முடக்கும்படி கூகுளுக்கு ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை

ணையம் வழியாக கடன் வழங்கும் 150 செல்போன் செயலிகளை முடக்கும்படி கூகுள் நிறுவனத்துக்கு ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடன் தரும் நிறுவனங்கள் கந்து வட்டி மற்றும் துன்புறுத்தலால் சிலர் தற்கொலை செய்துக் கொண்டதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கடன் செயலிகளை போலீசார் அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஹைதராபாத் போலீசாரைத் தொடர்பு கொண்டு கடன் செயலிகள் குறித்த விவரங்களை பெற்றுள்ளனர். சில சீன நிறுவனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இணைய வழி கடன் செயலிகளை இயக்கியது தொடர்பாக 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments