சாரதா நிதி நிறுவன மோசடி: மேற்கு வங்க காவல்துறை அதிகாரியை விசாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல்

0 1696

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் கொல்கத்தா காவல் துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் கடந்த 2019ம் ஆண்டு அவரை கைது செய்ய முயன்ற போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிபிஐக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால் கைது நடவடிக்கை தடைப் பட்டது.

அதன் பின்னர் பல முறை விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணையை தவிர்த்து விட்டார். இதனால் அவரிடம்  கூடுதல் விசாரணைக்கு அனுமதி கோரி சிபிஐ உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments