இத்தாலியில் எரிமலையால் அழிந்து போன நகரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழமையான கடை கண்டுபிடிப்பு

0 1972

இத்தாலியில் உள்ள புராதான நகரமான பொம்பேயியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழமையான கடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்ட அந்தக் கடையில் முழுமையான அளவில் பானைகளும், சில உணவுப் பொருட்களின் தடயங்களும் காணப்பெற்றுள்ளன. கடையின் முன்புறம் சேவல் மற்றும் வாத்து உருவங்கள் இடம் பெற்றுள்ளதால் இறைச்சிக் கடையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது ஒரு அசாதாரண கண்டுபிடிப்பு என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கி.பி. 79ல் எரிமலைச் சீற்றத்தினால் அழிந்து போன பொம்பேயி நகரத்தில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments