எகிப்தில் கொரோனா நோயாளிகள் இருந்த மருத்துவமனையில் தீ விபத்து... 7 நோயாளிகள் உயிரிழப்பு
எகிப்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 நோயாளிகள் உயிரிழந்தனர்.
தலைநகர் கெய்ரோ அருகில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை இந்தத் தீ விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மிஸ்ர் அல் அமல் மருத்துவமனையில் மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நெருப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து நோயாளிகள் மருத்துவமனையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஆனாலும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments