சென்னை கூவம் ஆற்றில் மணல் கொள்ளை முயற்சி... 20க்கும் மேற்பட்ட லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி கூவம் ஆற்றில் பொதுப்பணித் துறை அனுமதி பெற்றதாக கூறி நள்ளிரவில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் பொக்லைன் வாகனம் சிறைபிடிக்கப்பட்டது.
நேற்று இரவு 11 மணி அளவில் அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியை ஒட்டியுள்ள கூவம் ஆற்றில் 2 பொக்லைன் உதவியுடன் லாரிகளில் மணலை கடத்தும் முயற்சி நடைபெற்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் வைத்திருந்த ஆவணம் போலியானது என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து சுதாரித்து கொண்ட லாரி ஓட்டுனர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் காவல்துறையினர் மணல் கடத்தலில் ஈடுபட்ட சூப்பர்வைசர் அப்துல்ஜாபர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments