நடிகர் ரஜினிகாந்த் உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்

0 2120
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்

டிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக இருப்பதாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரத்த அழுத்தம் மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் இரு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

சில பரிசோதனைகளுக்குப் பிறகு அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று முடிவு செய்யப்பட உள்ளது. இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரஜினிகாந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தார்.

ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனை செய்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் ரஜினி விரைவில் பூரண நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments