உலகின் எடை குறைவான செயற்கைக்கோளை வடிவமைத்த தமிழக மாணவர்.. ஜூன் மாதம் விண்ணிற்கு அனுப்பும் அமெரிக்கா
தஞ்சாவூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர், வடிவமைத்துள்ள உலகிலேயே மிகவும் எடை குறைவான 2 செயற்கைக்கோள்களை, அமெரிக்காவின் நாசா, வருகிற ஜூன் மாதம் விண்ணிற்கு அனுப்ப உள்ளது.
அமெரிக்காவின் I-doodle-learning நிறுவனமும், நாசாவும் இணைந்து கேம்ஸ் இன் ஸ்பேஸ் (Games in Space) என்ற தலைப்பில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை நடத்தின.
இந்த போட்டியில், தஞ்சாவூர் கரந்தை பகுதியைச் சேர்ந்த என்ஜினியரிங் மாணவர் ரியாஸ்தீன், விஷன் சாட் வி-1, விஷன் சாட் வி-2 என்ற பெயரில், தலா 33 கிராம் எடையில் தயாரித்த செயற்கைக்கோள்கள் முதன்மை இடம் பிடித்து தேர்வாகின.
உலகிலேயே மிகவும் எடை குறைவான இந்த செயற்கைக்கோள்களை, வருகிற ஜூன் மாதம் விண்ணில் ஏவ உள்ளதாக, நாசா தெரிவித்துள்ளது.
Comments