அமெரிக்க வானில் மீண்டும் தாவி ஏற காத்திருக்கும் போயிங் 737 மேக்ஸ்
அமெரிக்காவில் 21 மாத இடைவெளிக்குப் பின்னர், அடுத்த வாரம் முதல், போயிங் 737 மேக்ஸ் விமானங்கள், பயணத்தை தொடங்க உள்ளன.
2018, 2019ஆம் ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளை தொடர்ந்து, போயிங் மேக்ஸ் ரக விமானங்கள் தரையிறக்கப்பட்டு, அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டன.
வர்த்தக ரீதியில், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க, கடந்த நவம்பரில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, விமானத்தின் முதல் பயணம், கடந்த 9ஆம் தேதி பிரேசில் நாட்டில் தொடங்கியது. இந்நிலையில்,அடுத்த வாரத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், தனது போயிங் 737 மேக்ஸ் விமானத்தை இயக்க உள்ளது.
போயிங் 737 மேக்ஸ் குறித்த வாடிக்கையாளர்களின் ஐயங்கள் தொடந்தாலும், எரிபொருள் சேமிப்பில் முன்னிலையில் உள்ளதால், அவற்றை இயக்குவதில், விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
Comments