சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.. உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி உத்தரவாதம்

0 1833

சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை மாநகராட்சி ஐந்தாவது மண்டலத்தில் சட்ட விரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநகராட்சி ஆணையர், மண்டல அதிகாரி ஆகியோர் காணொலியில் ஆஜரானதுடன், விதிமீறல் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிக்கை அளித்தனர்.

இதேபோல் பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோதக் கட்டுமானங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்வதாக அரசு வழக்கறிஞர் உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments