வீரமங்கை வேலு நாச்சியாராக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்..?

0 4164
ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்தி போராடிய முதல் தமிழ் பெண் என்ற பெருமை பெற்ற வீரமங்கை வேலுநாச்சியாராக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்தி போராடிய முதல் தமிழ் பெண் என்ற பெருமை பெற்ற வீரமங்கை வேலுநாச்சியாராக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17ஆம் நூற்றாண்டில் சிவகங்கைச் சீமையை ஆண்ட வேலுநாச்சியார் கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர்.

அண்மைக்காலமாக வரலாற்று சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கூடி வருவதால், அதுபோன்ற படங்களை இயக்குவதில் இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் திரைப்படத்தை இயக்குனர் சுசி கணேசன் இயக்க உள்ளதாகவும் அந்த படத்தில் வேலுநாச்சியாராக நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments