புத்தாண்டை கொண்டாடுவதற்காக, பைக் ரேசில் ஈடுபட்டால் சிறை -சென்னைப் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

0 3512
புத்தாண்டை கொண்டாடுவதற்காக, பைக் ரேசில் ஈடுபட்டாலோ, அதிவேகமாகவும் மது போதையிலும் வாகனங்களில் பயணித்தாலோ கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர் என சென்னைப் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

புத்தாண்டை கொண்டாடுவதற்காக, பைக் ரேசில் ஈடுபட்டாலோ, அதிவேகமாகவும் மது போதையிலும் வாகனங்களில் பயணித்தாலோ கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர் என சென்னைப் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது வாகனங்களில் அதிவேகமாக செல்பவர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை மெரினா மற்றும் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கிறிஸ்துமஸ் நாளில் பைக் ரேஸில் ஈடுபட்ட 225 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments