பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்ற “பெருச்சாளி” ரோபோ
கடலூரில் பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்ற அதிநவீன “பெருச்சாளி” ரோபோவை ஓஎன்ஜிசி நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது.
கழிவுநீர் தொட்டிகள், பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை அகற்றும் பணிகளின்போது விஷவாயு தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. இதற்கு தீர்வாக, ஓஎன்ஜிசி நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடையில் அடைப்புகளை அகற்றும் ரோபோ ஒன்றை வழங்கியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் இந்த இயந்திரத்தை கடலூர் நகராட்சி வசம் ஒப்படைத்தார்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த நிறுவனம் இந்த ரோபோவை 45 லட்ச ரூபாய் மதிப்பில் வடிவமைத்து, உருவாக்கி “பெருச்சாளி” எனப் பெயர் வைத்துள்ளது.
கடலூர் நகராட்சியில் உள்ள 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாக்கடை இணைப்புகளில் உள்ள 5 ஆயிரத்து 406 மேன்ஹோல்களில் அடைப்பை சரிசெய்ய பயன்படுத்தப்பட உள்ளது.
Comments