பொங்கல் பரிசு வழங்கக் கைரேகை முறை பயன்படுத்தப்படாது, ஸ்மார்ட் குடும்ப அட்டை ஸ்கேன் செய்யும் முறைதான் இருக்கும் - அமைச்சர் காமராஜ்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்குக் கைரேகை வைக்கும் முறை பயன்படுத்தப்படாது என்றும், ஸ்மார்ட் குடும்ப அட்டையை ஸ்கேனிங் செய்யும் முறையே பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் பனங்குடியில் மகளிர் குழுவினருக்குக் கடனுதவிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது எனத் தெரிவித்தார்.
Comments