பிரதமர் மருத்துவக் காப்பீட்டில் ஜம்மு காஷ்மீர் மக்களும் பயனடையும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

0 1144
பிரதமர் மருத்துவக் காப்பீட்டில் ஜம்மு காஷ்மீர் மக்களும் பயனடையும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் மருத்துவக் காப்பீட்டில் ஜம்மு காஷ்மீர் மக்களும் பயனடையும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்துள்ளார்.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கான பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நாட்டின் பிற மாநிலங்களில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவ வல்லுநர்களிடம் இணைய வழியில் மருத்துவ ஆலோசனைகளையும் பெற முடியும்.

திட்டத்தைத் தொடக்கி வைத்துப் பயனாளிகளுடன் கலந்துரையாடிய மோடி, மக்களாட்சியை வலுப்படுத்தவும், வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் ஜம்மு காஷ்மீர் மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்தார்.

காந்தியின் கிராம சுயராஜ்யம் ஜம்மு காஷ்மீரில் வெற்றிகண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments