கொரோனா பரவல் ஆபத்து இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் வேண்டுகோள்
கொரோனா பரவல் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டி, புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் யோஷிஹிதே சுகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய அவர், கொரோனா பரவலை தடுக்க புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட வேண்டாம் என்றும், புத்தாண்டு விடுமுறையை அமைதியான முறையில் வீட்டிலேயே குடும்பத்தினருடன் கழிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளை மேம்படுத்த இந்திய மதிப்பில் 19 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாகவும் அவர் அறிவித்தார்.
Comments