ஐந்தாம் தலைமுறையை சேர்ந்த Su-57 ஜெட் போர் விமானம், ரஷ்ய விமானப்படையில் இணைப்பு

0 1373
சுஹோய் வரிசையில் ஐந்தாம் தலைமுறையை சேர்ந்த Su-57 ஜெட் போர் விமானம் ரஷ்ய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

சுஹோய் வரிசையில் ஐந்தாம் தலைமுறையை சேர்ந்த Su-57 ஜெட் போர் விமானம் ரஷ்ய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

எதிரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி எதிர்பாராத தாக்குதல்களை நிகழ்த்தும் வல்லமை கொண்டது என ரஷ்யாவால் வர்ணிக்கப்படும் இந்த போர் விமானம், ராடார், இன்ஃபிராரெட், சோனார் கருவிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

ஒலியின் வேகத்தை விஞ்சும் விரைவு, வானில் எந்த திசையிலும் துரிதமாக திரும்பும் திறன், செங்குத்தாக மேலேறுவது, குட்டிக்கரணம் அடித்தபடியே கீழிறங்குவது என Su-57 போர் விமானத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Su-57 குறித்த அறிவிப்பு 2002-ஆம் ஆண்டில் வெளியான நிலையில், 2010ஆம் ஆண்டில் முதல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது ரஷ்ய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, ஐந்தாம் தலைமுறை சுஹோய் போர் விமானங்கள் ராணுவப் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments