ஹைப்பர்சானிக் ஏவுகணை ; உலகின் அதி நவீன போர் விமானம் இதுதான்!- ரஷ்ய விமானப்படையில் இணைந்தது 'வான்அசுரன்' சுகோய் 57!

0 8641
சுகோய் - 57 ரக போர் விமானம்

உலகிலேயே அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய் 57 ரக போர் விமானம் ரஷ்ய விமானப்படையில் இணைக்கப்பட்டதாக ரஷ்யா டுடே தொலைக்காட்சி செய்து வெளியிட்டுள்ளது.

ஐந்தாம் தலைமுறை போர் விமானமனங்களான எப் 22 மற்றும் எப் 35 ரக போர் விமானங்கள் அமெரிக்க விமானப்படையில் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளன. ஒற்றை இருக்கை இரட்டை இன்ஜீன் கொண்ட இந்த விமானங்களை ரேடாரால் கூட கண்டுபிடிக்க இயலாது. தற்பொழுது , பயன்பாட்டிலுள்ள ஐந்தாம் தலைமுறை போர்விமானங்கள் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில், ரஷ்யா சுகோய் 57 ரக விமானத்தை தயாரித்து வந்தது.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இந்த விமானத் தயாரிப்பில் ரஷ்யாவின் சுகோய் ஏவியேஷன் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு சுகோய் 57 ரக முதல் விமானம் தயாரிக்கப்பட்டு விட்டது. எனினும், பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இந்த நிலையில், சிரிய நாட்டு வான்பரப்பில் போர்களத்திலேயே இரண்டு ஆண்டுகளாக சுகோய் விமானத்தின் பரிசோதனைகள் நடைபெற்று வந்தன. எனினும், சுகோய் 57 ரக விமானங்கள் ஏவுகணைகளேயோ அல்லது வெடிகுண்டுகளையோ வீசாமலேயே பரிசோதனையில் பங்கேற்றன. பரிசோதனை வெற்றி பெற்றதையடுத்து, ரஷ்ய விமானப்படையில் முதல் சுகோய் 57 ரக போர் விமானம் டிசம்பர் 25 ஆம் தேதியன்று இணைப்பட்டது.

அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை விமானங்கள் போலலே சுகோய் 57 ரக போர் விமானமும் இரட்டை இன்ஜீனும் ஒற்றை இருக்கையும் கொண்டது. சுகோய் 57 ரக போர் விமானங்கள் ரேடார்கள் அனுப்பும் சிக்னல்களில் சிக்காத தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது, ரேடார் அனுப்பும் சிக்னல்கள் இந்த விமானங்களின் மீது பட்டால் சிக்னல்களை தன் உலோக அமைப்புகள் அல்லது அதன் மீது பூசப்படும் பெயிண்டுகளே உறிஞ்சு வைத்துக் கொள்ளும் . கம்ப்யூட்டர் பைலட் என்ற விமானிதான் சுகோய் 57 ரக விமானத்தின் துணை விமானியாக கருதப்படுகிறது.

காக்பீட் அறையில் உள்ள நவீன கணிணி மூலம் விமானத்தின் உட்புற மற்றும் வெளிப்பூற அழுத்தங்கள் கணிக்கப்பட்டு பறக்கும் உயரம், வேகம் ஆகியவற்றை கணித்து தானாகவே விமானத்தை பறக்க வைக்கும். இதனால், இந்த கணிணியை electronic second pilot என்று அழைக்கிறார்கள். ஹைப்பர்சானிக் ஏவுகணைகளையும் இதில் பொருத்த முடியும். தற்போதைய நிலையில் உலகின் ஆபத்தான போர் விமானம் இதுதான்.

அமெரிக்காவின் நவீன போர் விமானமான எப் 35 ரக போர் விமானத்தை விட சுகோய் 57 அதிநவீனமானது. ரஷ்யாவின் சுகோய் 57 போர் விமானம் மணிக்கு 1,600 மைல் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. அமெரிக்காவின் எப் 35 விமானம் 1,200 மைல் வேகம் பறக்கக் கூடியது. சுகோய் விமானத்தில் 10.000 கிலோ எடை வரை ஏவுகணைகளை சுமக்க முடியும் . அதோடு மொத்தம் 78,300 கிலோ எடையுடன் மேல் எழும்பும் திறன் கொண்டது. எப்- 35 ரக போர் விமானம் 70, 000 கிலோவுடன் மேல் எழும்பும். 9, 000 கிலோவரை வெடி பொருள்களை சுமக்கும் திறன் கொண்டது. சுகோய் 57 போர் விமானத்தில் அதிகபட்சமாக 65,000 அடி உயரம் வரை பறக்கும் . எப் 35 ரக விமானத்தால் 50,000 அடி உயரம் வரைதான் பறக்க முடியும்.

வருகிற 2028 ஆம் ஆண்டுக்குள் 76 சுகோய் 57 ரக போர் விமானங்கள் ரஷ்ய விமானப்படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவும் சுகோய் 57 ரக விமானங்களை வாங்க ஆர்வம் கொண்டுள்ளது. இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி பி.எஸ்தனோவா  ரஷ்ய விமானப்படையில் சுகோய் 57 ரக போர் விமானங்கள் இணைக்கப்பட்ட பிறகு, இந்தியாவும் அதை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யும் என்று ஒரு முறை கருத்து தெரிவித்திருந்தார். மறைந்திருந்து தாக்கும் சுகோய் போர் விமானங்களின் தனித்திறனுக்காகவே இந்திய விமானப்படை தளபதிகள் சுகோய் 57 ரக போர் விமானங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments