ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாதர் கோவிலில் 9 மாதங்களுக்குப் பின் மீண்டும் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி
ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாதர் கோவிலில் ஒன்பது மாதங்களுக்குப் பின் இன்று முதல் மீண்டும் பக்தர்கள் வழிபாட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழலில் மார்ச் இறுதி வாரத்தில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாதர் கோவில் ஒன்பது மாதங்களுக்குப் பின் பொதுமக்கள் வழிபாட்டுக்கு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களுக்கு இன்று முதலும், வெளியூர் பக்தர்களுக்கு ஜனவரி மூன்றாம் நாளில் இருந்தும் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இல்லை எனச் சான்றுபெற்று வருவோர் மட்டுமே வெப்பநிலைச் சோதனைக்குப் பின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
Comments