இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி.. ஆஸ்திரேலியா 195 ரன்களில் சுருண்டது..!
இந்திய அணியின் கட்டு கோப்பான பந்துவீச்சால், 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களில் சுருண்டது.
மெல்பேர்னில் தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்னஸ், முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இதேபோல் மற்ற ஆஸ்திரேலிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பும்ரா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், அறிமுக வீரர் சிராஜ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் டக் அவுட்டாகி வெளியேறினார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது. சுப்மான் கில், புஜாரா களத்தில் இருந்தனர்.
Comments