திமுகவின் கிராம சபை கூட்டம் வெற்றி பெற்றதால் தடை விதிக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின்
திமுகவின் கிராம சபை கூட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 96ஆவது பிறந்த நாளையொட்டி, அக்கட்சி மாநில தலைமையகமான பாலன் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக சார்பில் ஏறக்குறைய 12600க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருவதாகவும், அக்கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதாகவும் கூறினார்.
Comments