கொரோனா மாதத்திற்கு 2 உருமாற்றங்களை அடையக் கூடியது -எய்ம்ஸ் இயக்குநர்
கொரோனா வைரஸ் மாதத்திற்கு இரு உருமாற்றங்களை அடையக் கூடியது என்பதால் கவலைப்படத் தேவையில்லை என எய்ம்ஸ் இயக்குநரும், கோவிட் மேலாண்மைக்கான தேசிய பணிக்குழு உறுப்பினருமான ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸைப் பொறுத்தவரையில், அதிக தொற்றுத்தன்மை கொண்டது என அவர் கூறியுள்ளார். இந்த உருமாற்றத்தால் அறிகுறிகளிலோ சிகிச்சை முறையிலோ மாற்றங்கள் தேவைப்படவில்லை என்றும், தற்போது பல்வேறு கட்டங்களில் உள்ள தடுப்பூசிகள் பிரிட்டன் உருமாற்ற கொரோனாவுக்கும் எதிராக செயல்படக் கூடியவைதான் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
வைரஸில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படும்போது, அதற்கேற்ப தடுப்பூசிகளை திறன்வாய்ந்த முறையில் உற்பத்தி செய்பவர்கள் மாற்றிக் கொள்வார்கள் என்றும், தற்போது அத்தகைய மாற்றத்திற்கு அவசியம் இல்லை என்றும் ரண்தீப் குலாரியா கூறியுள்ளார்.
Comments