வாய்த்தகராறில் ஆத்திரம்.. கள்ளக்காதலியை கட்டையால் அடித்துக்கொன்ற கள்ளக்காதலன்..!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கள்ளக்காதலியை கட்டையால் அடித்துக்கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
பாப்பாத்திகாட்டுபுதூரைச் சேர்ந்த, விஸ்வநாதனுக்கும்,இதேபகுதியைச் சேர்ந்த ராஜி என்பவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு,கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றாக வசித்துள்ளனர்.
கூலித் தொழிலாளிகளான இவர்கள், தேங்காய் பறிப்பதற்காக கர்நாடக மாநிலம் ராமாபுரத்திற்கு சென்று விட்டு வனப்பகுதி வழியாக ஊர் திரும்பும் வழியில்,இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில், ராஜியை,விஸ்வநாதன் அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
Comments